Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சந்தானம் எடுத்த முடிவு துணிச்சலானது” - சிவகார்த்திகேயன்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (10:50 IST)
‘சந்தானம் ஹீரோவாக நடிக்க எடுத்த முடிவு துணிச்சலானது’ என சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில், வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ளார். மேலும், சினேகா, பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்தப் படம் ரிலீஸாகும் டிசம்பர் 22ஆம் தேதி, சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ரிலீஸாகிறது. ‘சந்தானம் படம் உங்களுக்குப் போட்டியா?’ என்று சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.
 
“நான் எந்தப் படத்தையும் போட்டியாக நினைப்பது கிடையாது. என் படங்கள்தான் எனக்குப் போட்டி. கவுண்டமணி, விவேக், வடிவேலுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம். அவர் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை.  ஹீரோவாக நடிக்க அவர் எடுத்த முடிவு, துணிச்சலானது. ஹீரோவாக அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்” எனப் பதில்  அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? வேகமாக பரவி வரும் வதந்தி..!

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments