Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தின் இங்க நான்தான் கிங்கு டிரைலர் எப்படி இருக்கு?

vinoth
சனி, 27 ஏப்ரல் 2024 (10:51 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் இங்க நாங்கதன் கிங்கு என்ற படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்கயுள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை உரிமையை சரிகம பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரலில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போது மே மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இப்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. சந்தானம் திருமனத்தில் தொடங்கும் டிரைலர், அவரை பயங்கரவாதியாக காட்டி அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை சொல்லும் விதமாக செல்கிறது. சந்தானம் அடிக்கும் counter கள் எல்லாமே மிகவும் கேட்டுப்புளித்த பழைய ரகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments