Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைக்கு எங்க தியேட்டர்ல்ல ஸ்பெஷல் ஷோ போட்றோம்: சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ டிரைலர்

Siva
புதன், 30 ஏப்ரல் 2025 (11:25 IST)
நடிகர் சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படம் வரும் மே 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் மூன்று நிமிடத்திற்கு மேலான ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் மற்றும் பேய்களின் திகில் காட்சிகள் அடங்கியுள்ள இந்த படம், நிச்சயம் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யும் சந்தானத்தை கடத்தி ஒரு கப்பலில் வைத்து விடுகின்றனர். அந்த கப்பலில் சில அமானுஷ்ய சக்தி இருக்கும் நிலையில், அதிலிருந்து சந்தானம் தப்பித்து வந்தாரா என்பது என்ற ஒன்லைன் கதை தான் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
 
சந்தானம், கீதிகா, செல்வராகவன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.
 
இந்த படம் சந்தானத்தின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானத்தை இயக்குகிறாரா கௌதம் மேனன்?... வெளியானத் தகவல்!

எங்கள் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்… நானி பட இயக்குனர் வேண்டுகோள்!

சச்சின் ரி ரிலீஸ் வெற்றி.. அடுத்தடுத்து அஜித், சூர்யா படங்களை ரி ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் தாணு!

என்னுடைய கனவுப் படத்தில் நானி கண்டிப்பாக இருப்பார்… ராஜமௌலி உறுதி!

VJS- பூரி ஜெகன்னாத் படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments