Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பிகில்" சத்தத்தில் ஒதுங்கிப்போன "சங்கத்தமிழன்"

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (18:02 IST)
சிம்பு நடித்த 'வாலு' மற்றும் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன்  இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். மேலும் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  


 
சமீப நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த இப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 
 
ஆனால், தற்போது தீபாவளி அன்று படம் ரீலீஸ் ஆகாது என்று லிப்ரா புரடெக்க்ஷன்ஸ் அறிவித்துள்ளது. காரணம், கோலிவுட்டின் மாஸ் விஜய் நடித்துள்ள பிகில் படமும் அன்றைய தினத்தில் வெளியாவதால் சங்கத்தமிழன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது மிகவும் கடினம். இதனை கருத்தில் கொண்டு சங்கத்தமிழன் தீபாவளி ரிலீசிலிருந்து பேக் வாங்கியுள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 8 அல்லது 15ந் தேதி ரிலீசாக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments