Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் சான்ஸ் இல்லையா? டான்னு பேமெண்ட் தரும் தொழிலை சொல்றேன்: சனம் ஷெட்டி

Siva
புதன், 23 ஏப்ரல் 2025 (07:28 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டி, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கருத்து, திரையுலகத்தைச் சுற்றியுள்ள மாறுபட்ட யோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
 
"திரைப்பட வாய்ப்புக்காக காலத்தை வீணடிப்பதைவிட, யூடியூப் போன்ற மாடர்ன் தளங்களில் நம் திறமையை காட்டுவது நல்லது. YouTubeல் இருந்து நேர்மையாகவே பேமெண்ட் வருகிறது’ என அவர் கூறியுள்ளார்.
 
சினிமாவில் முன்னேறுவதற்காக சீரற்ற சூழல்களில் தன்னை பலர் தள்ளிக் கொள்கிறார்கள் என்றும், அந்த வாய்ப்புகளுக்காக அநியாயங்களை தாங்க வேண்டிய சூழல் பெரும்பாலும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"திரைப்பட வாய்ப்பு பெற இப்போது யாரையும் நோக்கி காத்திருக்க தேவையில்லை. யாரும் எதையும் உத்தரவாதம் செய்யவில்லை. பதிலாக நமக்குள் உள்ள திறமையை யூடியூபில் வெளிப்படுத்துங்கள். நேர்மையான வேலைக்கு நேர்மையான பேமெண்ட் யூடியூப்பில் பெற முடியும்," என்றார் சனம் ஷெட்டி.
 
தனது அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், "நான், நடிகர் ஸ்ரீ போன்ற பலரும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய சவால்களை சந்தித்துள்ளோம். ஆனாலும், யூடியூப் போன்ற தளங்கள் நம்மைத் திரையுலகத்திற்கும் வெளியிலும் மேடையமைத்து விட்டன. அந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள். உங்கள் சுயமரியாதையை விட்டு திரையுலக வாய்ப்புக்காக சுழல வேண்டியதில்லை," என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ மூலம் ரம்யா சுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய வீடியோ? கேஸ் போடுவேன் என எச்சரிக்கை..!

‘விஸ்வாசம்’ படத்தின் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’.. வெற்றிப் பாதைக்குத் திரும்பிய AK

சூர்யாவின் அடுத்தப் படத்தின் பணிகளைத் தொடங்கிய இயக்குனர்& இசையமைப்பாளர்!

‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

படமே இல்லாமல் இருந்த இயக்குனர். கார்த்தி வாய்ப்பு கொடுத்தும் கடுப்பேத்தியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments