Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹைதராபாத் இளவரசியாகும் சனா கான்

ஹைதராபாத் இளவரசியாகும் சனா கான்
, செவ்வாய், 17 ஜூன் 2014 (12:35 IST)
சிலம்பாட்டத்தில் அறிமுகமான சனா கானை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அவரும் தரவில்லை என்று சொல்ல வேண்டும். சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சென்னை பக்கம் அவர் வருவதில்லை. சல்மானுடன் ஏற்பட்ட நட்பு அவருக்கு ஜெய்ஹோ படத்தில் ஒரு சின்ன வேடத்தையும் பெற்றுத் தந்தது.
ஜெய் ஹோ இந்தியாவில் 116 கோடிகள் வசூலித்தது. ஆனாலும் அதுவொரு தோல்விப் படம். அது தோல்விப் படம்தான் என்று சல்மானும் ஒப்புக் கொண்டார். அதில் சனா கான் நடித்திருந்தது துணை நடிகை செய்ய வேண்டிய மிகச்சிறிய ரோல். படமும் தோல்வியடைய ஜெய் ஹோ-வில் நடித்தது சனா கானுக்கு கரும்புள்ளியாகிவிட்டது.
 
இந்நிலையில் இந்தோ - அமெரிக்க தயாரிப்பு ஒன்றில் நடிக்க சனா கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குனர் இயக்கவிருக்கும் இது ஒரு சரித்திரப் படம். ஹைதராபாத் இளவரசியாக இதில் சனா கான் நடிக்க உள்ளார். மற்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த புராஜெக்ட் இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பதால் இப்போது எதுவும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார் சனா கான்.

Share this Story:

Follow Webdunia tamil