Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கான் திரைப்பட விழாவைக் குறி வைத்து படம் எடுக்கும் சமுத்திரகனி

Webdunia
சனி, 25 அக்டோபர் 2014 (11:32 IST)
கிட்ணா என்ற படத்தை சமுத்திரகனி எடுக்கயிருப்பதாக அறிவித்து பல மாதங்கள் ஆகிறது. சமுத்திரகனியும், அமலா பாலும் முக்கிய வேடத்தில் நடிக்க மலைவாழ் மக்களின் வாழ்க்கையை கிட்ணாவில் காட்சிப்படுத்தயிருப்பதாக செய்திகள் வெளியாயின.
 
இந்த அறிவிப்புக்குப் பிறகு அமலா பாலுக்கு திருமணம் நடக்க, அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார். அவருக்குப் பதில் தன்ஷிகாவை ஒப்பந்தம் செய்தார் சமுத்திரகனி.
 
நான்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் தமிழ், மலையாளத்தில் சமுத்திரகனியும், தெலுங்கு, கன்னடத்தில் கிஷேnரும் நடிக்கிறார்கள். தன்ஷிகா நான்கு மொழிகளிலும் நடிக்கிறார். 
 
கிட்ணாவை சமுத்திரகனி இரண்டுவிதமாக எடுக்கயிருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டேகால் மணிநேரம் ஓடக் கூடியதாகவும், மூன்று மணிநேரம் ஓடக் கூடியதாகவும் கிட்ணா தயாராகிறது. மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படத்தை கான் திரைப்பட விழாவுக்கு விருதுப் போட்டிக்கு அனுப்பவுள்ளார். இரண்டேகால் மணிநேரப் படம் பொதுவான பார்வையாளர்களுக்கு.
 
இந்த இரு விதமான படங்களையும் ஒரே நேரத்தில் திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments