ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு கார் பரிசளித்த சமந்தா

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (23:32 IST)
ஆட்டோ ஓட்டி தனது ஏழு சகோதரிகளை காப்பாற்றி வரும் பெண்ணிற்கு நடிகை சமந்தா ஒரு காரை பரிசாக அளித்துள்ளார். இதற்கு பலரும் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா,தெறி,அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமந்தா.  இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கவிதா என்ற பெண்ணும் கலந்து கொண்டார். அப்போது, தனது பெற்றோர் இறந்துவிட்டதால் 7 சகோதரிகளைக் காப்பாற்றி வருவதாகவும் குடும்ப வறுமையால் ஆட்டோர் ஓட்டிவருவதாகவும் கூறினார். இதனால் அவரது கஷ்டத்தை உணர்ந்த சமந்தா, நீங்கள் டிராவல்ஸ் ஆரம்பித்து இன்னும் உயர வேண்டுமெனறு ஒரு காரை பரிசளிப்பதாக உறுதியளித்தார்.  அவர் கூறியபடி 12.5 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை பரிசளித்தார். ரசிகர்கள் சமந்தாவின் செயலுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments