Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தாவின் ‘யசோதா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:07 IST)
நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ‘யசோதா’ படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
‘யசோதா’ படத்தின் டிரைலர் நாளை மாலை 5.36  மணிக்கு வெளியாகும் என்றும் இந்த படத்தின் ஐந்து மொழி டிரைலரும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் தமிழ்மொழி டிரைலரை சூர்யா வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 
இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை ஹரி ஹரிஸ் இயக்கியுள்ளனர். இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments