வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

vinoth
திங்கள், 16 ஜூன் 2025 (10:12 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவரது தந்தையின் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.

சமீபகாலமாக அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர். தாய்மொழியான தமிழில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. தற்போது டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் “2 ஆண்டுகளாக என் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் முதிர்ச்சி அடைவதே சுதந்திரம் என்பது எனக்கு இப்போது புரிந்துள்ளது. முன்பு போல வெற்றிகள் இல்லையே என்று என்னை சுற்றிவுள்ளவர்கள் நினைக்கலாம். ஆனால் நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வேலைகள் எனக்கு நிம்மதி தரும்போது, நான் ஏன் மற்றவர்களின் கருத்துக்குக் கவலைபடவேண்டும்” எனக் கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments