Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தின் டப்பிங்கை முடித்த சமந்தா

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (11:12 IST)
விக்ரம், சமந்தா, பசுபதி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிவரும் படம், 10 எண்றதுக்குள்ள. இந்தப் படத்தில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் முடிந்துவிட்டதாக சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதோ, இரண்டே மாதம் என்று சொல்லித்தான், 10 எண்றதுக்குள்ள படத்தை தொடங்கினர். ஆனால், எதிர்பாராத பிரச்சனைகளால் படப்பிடிப்பு தடைபட்டது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை இந்த மாதம் 16 -ஆம் தேதி தொடங்குகின்றனர்.
 
இந்த தாமதம் காரணமாக திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் படம் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. படப்பிடிப்பு தாமதமானாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. அதனை சமந்தாவின் ட்வீட்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் படம் வெளியாகும் எனவும் தனது ட்வீட்டில் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments