முன்னாள் கணவரோடு வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (17:51 IST)
பிரபல நடிகை சமந்தா கடந்த ஆண்டு நாக சைதன்யாவை பிரிந்தார். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

ஆனாலும் அவ்வப்போது விவாகரத்து குறித்த செய்திகளை இருவருமே எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது விவாகரத்து குறித்து பேசிய அவர் “திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் இல்லை என்றால் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் இந்த முடிவு கடினமானதாக இருந்தது. ஆனால் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன். மேலும் எப்போதையும் விட வலிமையாக உள்ளேன். இந்த வாழ்க்கை இப்போது எனக்கு வசதியாகவே உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சமந்தா நாக சைதன்யாவோடு இணைந்து வாழ்ந்த வீட்டை அதிக விலை கொடுத்து சமந்தாவே வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்