Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணத்துக்கு 10 நாள் லீவு எடுக்கும் சமந்தா

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (11:20 IST)
கல்யாணத்துக்காக, படப்பிடிப்பில் இருந்து 10 நாட்கள் மட்டுமே லீவு எடுக்கப் போகிறாராம் சமந்தா.


 

நாக சைதன்யா – சமந்தா திருமணம், வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் இந்த திருமணத்தில், தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

சமந்தாவிடமோ, ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் நடிக்கும் படம், விஷாலுடன் ‘இரும்புத்திரை’, விஜய் சேதுபதியுடன் ‘அநீதி கதைகள்’, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, மாமனார் நாகர்ஜுனா ஜோடியாக ஒரு தெலுங்குப் படம், ராம் சரண் ஜோடியாக ஒரு தெலுங்குப் படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என சமந்தாவின் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்நிலையில், திருமணத்திற்காக மூன்று மாதங்கள் நடிப்பிற்கு பிரேக் விடப்போகிறார் சமந்தா என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மறுத்துள்ள சமந்தா, அக்டோபர் 1 முதல் 10 நாட்களுக்கு மட்டுமே லீவ் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments