Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச் வினோத் & தனுஷ் இணையும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர்!... வெளியான தகவல்

vinoth
வெள்ளி, 25 ஜூலை 2025 (10:48 IST)
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் தீரன், வலிமை, துணிவு என அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார்.

கமல்ஹாசனோடு ஒரு படம் பண்ண ஒப்பந்தம் ஆன, சில காரணங்களால் அந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டது. இப்போது அவர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இதுதான் விஜய்யின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் நீண்ட நாட்களாக தனுஷுடன் இணைந்து ஒரு படம் இயக்க வினோத் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். இந்நிலையில் வினோத்தின் அடுத்த படமாக அந்த படம்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் சாம் சி எஸ் ‘தனுஷ்- ஹெச் வினோத் படத்துக்கு நான் இசையமைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜயகாந்தின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஹிட் ‘கேப்டன் பிரபாகரன்’ ரி ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

இளையராஜாவின் சிம்ஃபொனி நிகழ்ச்சி சென்னையில் எப்போது?.. ஆலோசனை!

என்னது ரஜினியின் தர்மதுரை படத்துக்கு எஸ் பி முத்துராமன் இயக்குனரா?... நேர்காணலில் உளறிய லோகேஷ்!

மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!

கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments