Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

vinoth
சனி, 29 மார்ச் 2025 (08:45 IST)
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸாகி கவனம் ஈர்த்தன. இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் முருகதாஸ்- விஜய் கூட்டணியில் உருவான சர்கார் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்தி படங்கள் தென்னிந்தியாவில் பெரிதாக ஓடாதது குறித்துத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “ரஜினிகாந்த் சார், சிரஞ்சீவி சார், சூர்யா மற்றும் ராம்சரண் ஆகியோரின் படங்களை நாங்கள் இங்கு பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அவர்கள் ரசிகர்களிடம் எங்கள் படங்களைப் பார்க்க சொல்வது இல்லை. தென்னிந்தியாவுக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை ரசிகர்கள் ‘பாய் பாய்’ என அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு சென்று என் படத்தைப் பார்க்க மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments