Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

vinoth
திங்கள், 31 மார்ச் 2025 (12:36 IST)
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் நேற்று ரிலீஸானது. ஆனால் ரிலீஸாவதற்கு முன்பே இந்த படத்தின் HD பிரிண்ட் முதல் நாளே இணையத்தில் ரிலீஸானது. இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

படத்தின் ரிலீஸுக்கு முன்பே இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதன் காரணமாக முன்பதிவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் முதல் நாளில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாளில் 26 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முதல் நாளிலேயே வசூல் குறைவாக உள்ளதாலும், படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக உள்ளதாலும் படத்தின் வசூலில் பெரிய தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments