Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட அமெரிக்காவில் அதிக இடங்களில் ரிலீஸாகும் பிரபாஸின் சலார்!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (19:56 IST)
பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர்  நடிப்பில், கேஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் சலார். இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி  பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘சலார்’ படத்தின் டீசர் கடந்த ஜூலை 6 ஆம் தேதி அதிகாலை வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின்  டீசர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து பல கோடிப் பேரால்  பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

இந்த படம் இன்னும் வெளியாகாத  நிலையில், ஓடிடி வெளியீட்டு உரிமை மட்டும் ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரபாஸில் சலார் திரைப்படம் அரும் செப்டம்பர் 27 ஆம் தேதி  வட அமெரிக்காவில் 1979 இடங்களில் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிறது.

வட அமெரிக்காவில் ஒரு இந்திய நடிகரின் படம் அதிக இடங்களில் ரிலீஸ் செய்வது இதுவே முதல் முறை என்பதால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments