Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலை அடுத்து ஆர்யாவின் படத்தில் இணைந்த சாக்சி அகர்வால்

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (19:25 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சாக்சி அகர்வால், நிகழ்ச்சி முடிவடைந்த உடன் முதல் நபராக திரையுலகில் வாய்ப்புகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற முகின், மக்களின் மனதை கவர்ந்த தர்ஷன், கவின், லாஸ்லியா ஆகியோர்களுக்கு கூட இன்னும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் நெகட்டிவ் இமேஜ் பெற்ற சாக்சி அகர்வாலுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது 
 
ஏற்கனவே அவர் விஷாலின் ’ஆக்சன்’ படத்தில் டப்பிங் கலைஞராக பணிபுரிந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். தற்போது அவர் ஆர்யாவின் அடுத்த படமான ’டெடி’ என்ற படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 
 
ஆர்யாவும் அவருடைய மனைவி சாயிஷாவும் ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார். டி. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க தற்போது சாக்சி அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கேரக்டர் சாக்சி அகர்வாலுக்கு கோலிவுட் திரையுலகில் ஒரு ரீஎன்ட்ரி ஆக இருக்கும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments