Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

vinoth
செவ்வாய், 20 மே 2025 (07:40 IST)
சமீபகாலமாக நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையை அதிகளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. அதே போல அவர் உடல்நிலைக் குறித்தும் பொதுவெளியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையில் அவர் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் முடங்கிய மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது அவருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

அடுத்த நல்ல செய்தியாக சமீபத்தில் விஷால் தனது திருமணத்துக்குப் பெண்பார்த்துவிட்டதாகவும், இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் என்றும் அறிவித்திருந்தார். இதற்கிடையில் விஷால் தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் சாய் தன்ஷிகாவைதான் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்று தகவல் பரவி வந்தது.

அதை நேற்று தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷாலும் சாய் தன்ஷிகாவும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உறுதிபடுத்தினர். இதுபற்றி பேசிய தன்ஷிகா “விஷால் எனக்கு 15 ஆண்டுகளாக நண்பர். எனக்காக அவர் பல சமயங்களில் குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில்தான் நான் எங்கள் நட்பு திருமணத்தை நோக்கி செல்வதை உணர்ந்தோம், இது சம்மந்தமாக இருவரும் பேசினோம். வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments