Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடம்பை காட்டிதான் நடிக்கணும் என்ற அவசியம் இல்லை.. சாய்பல்லவி பதில்!

vinoth
வியாழன், 24 அக்டோபர் 2024 (09:01 IST)
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.  முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதே போல கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்ததாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கவர்ச்சியாக நடிக்காதது குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசியுள்ளார். அதில் “நான் ஒரு நடன நிகழ்ச்சியில் கவர்ச்சியாக நடனம் ஆடினேன். பிரேமம் ரிலீஸான போது அதை பரப்பினார்கள். அதனால் நான் இனிமேல் அதுபோல நடிக்கக் கூடாது என முடிவு செய்தேன். நான் ஒன்றும் சதைப் பிண்டம் கிடையாது. நான் இப்படி நடிக்கும்போதே ரசிகர்கள் என் மேல் அன்பு காட்டுகிறார்கள். அதனால் நான் இதையே பின்பற்றுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நபர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

சென்னையில் இன்று தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் ஷூட்!

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் அண்ணாச்சி பட இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments