Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பாகங்களாக உருவாகும் ராமாயணம்.. சீதையாக சாய் பல்லவி.. ராமர் யார் தெரியுமா?

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (10:35 IST)
3 பாகங்களாக உருவாகும் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யாஷ், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கவுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் இந்த படம் உருவாகவுள்ளது.

மூன்று பாகங்களாக இந்தப் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் யாஷ் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும், அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்தப் படத்தில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகவும், நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சாய் பல்லவி நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments