Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

vinoth
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (14:30 IST)
கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். ஆன்லைன் ஸ்ட்ரிமீங் தளங்களில் ஒன்றான ஸ்பாட்டிஃபை  கடந்த ஆண்டுக்கான அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடலாக ‘கட்சி சேர’ பாடல் அனிருத் ரஹ்மான் பாடல்களை எல்லாம் மிஞ்சி முதலிடம் பிடித்தது.

இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’, சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையிலும் அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments