Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி' நாயகனின் அடுத்த படம் ரிலீஸ் தேதி இதுதான்!

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (12:22 IST)
'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் பிரபாஸ். இந்த இரண்டு படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வந்த 'சாஹோ' திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
 
இந்த படம் வரும் சுதந்திர தின விருந்தாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் UV கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரபாஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
சுஜித் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக ஷராதா கபூர் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான இவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படம் இதுதான். இந்த படத்தின் வில்லனாக அருண்விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.மதி ஒளிப்பதிவில் ஷங்கர் இஷான் லாய் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments