Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளப் டான்சர் - இதுதான் எலியில் சதாவின் வேடம்

கிளப் டான்சர் - இதுதான் எலியில் சதாவின் வேடம்
, வியாழன், 16 ஏப்ரல் 2015 (09:35 IST)
துண்டு துக்கடா வேடம் போய், சிங்கிள் டான்சுக்கு ஆடுகிற வாய்ப்பும் இல்லாமல் இருந்தார், சதா. இந்நிலையில் வடிவேலு நடிக்கும் எலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். யானைக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு ஜோடியாவது மேல் அல்லவா?
 

 
வடிவேலுடன் நடிக்க சதா எப்படி சம்மதித்தார் என்று, சதாவின் இன்றைய நிலை தெரியாத சிலர் காமெடி கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு பொறுப்பாக படத்தின் இயக்குனர் பதிலளித்தார். எப்படி?
 
எலி படத்தின் கதையும், அவரது கதாபாத்திரமும் பிடித்ததால்தான் சதா நடிக்க ஒப்புக் கொண்டாராம். கதை கேட்டு நடிக்கிற நிலையிலா இருக்கிறார் சதா? போகட்டும், படத்தில் அவரது வேடம் என்ன?
 
வடிவேலு சிக்கிக் கொள்ளும் கொள்ளைக் கூட்டத்தில் கிளப் டான்சராக இருக்கிறார் சதா. வடிவேலு தப்பிக்க அவர் சில உதவிகள் செய்கிறார். இதுதான் அவரது வேடம். அபூர்வமான வேடம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil