விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் நடித்த சீரியல் திடீர் முடிவு!

vinoth
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:55 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் அவருக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகமாக்கி, அதன் பின்னர் அவரை ப்ரமோட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டதால் முன்பு போல பிஸியான இயக்குனராக செயல்படவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ள அவர் சமீபத்தில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வெளியிட்டார்.

இதற்கிடையில் கொடி, மாநாடு போன்ற படங்களின் மூலம் நடிகராக அறியப்பட்ட எஸ் ஏ சந்திரசேகர், இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியலை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ராதிகா. இந்நிலையில் ஒரு வருடமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரேஷ்மா விலகியதால் சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments