Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சாமி ஸ்கொயர்’ விக்ரமுக்கு மூன்று வில்லன்கள்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (11:54 IST)
விக்ரம் நடித்துவரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில், அவருக்கு வில்லன்களாக மூன்று பேர் நடித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகிறது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார். ‘இருமுகன்’ படத்தைத் தயாரித்த ஷிபு தமீம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
‘சாமி’ படத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருப்பார். இந்தப் படம், முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், அவர் இறந்து 29 வருடங்கள் கழித்து நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. இறந்துபோன பெருமாள் பிச்சைக்கு, சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமல்ல, பெருமாள் பிச்சைக்கு மூன்று மகன்கள் என்றும், தங்கள் தந்தை இறப்புக்காக மூன்று பேரும் சேர்ந்து விக்ரமைப் பழிவாங்குவது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா, ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் ஜான் விஜய் மூன்று பேரும்தான்  அந்த மகன்கள். இதில், பாபி சிம்ஹாவின் பெயர் ராவண பிச்சை என்று வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments