Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம்-த்ரிஷாவின் 'சாமி 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (23:58 IST)
இயக்குனர் ஹரி-சீயான் விக்ரம் கூட்டணியில் உருவான சூப்பர் ஹிட் படமான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்ப்பிடிப்பை முடித்த விக்ரம் தற்போது 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
'சாமி 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகும் என்றும் தெரிகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நெல்லையில் நடைபெறவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் விக்ரம், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்ப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
விக்ரம், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பாபிசிம்ஹா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இந்த படத்தை ஷிபுதமீன்ஸ் தயாரிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments