Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலாலம்பூரில் கோலாகலமாக நடக்கும் சாஹசம் பாடல்கள் வெளியீடு

கோலாலம்பூரில் கோலாகலமாக நடக்கும் சாஹசம் பாடல்கள் வெளியீடு
, புதன், 20 மே 2015 (15:29 IST)
சாஹசம் படத்தை தியாகராஜன் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். பிரசாந்தின் ஸ்டார் வேல்யூ போட்ட பணத்தை திருப்புமா என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. மகனின் படம், எல்லாமே பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் அவருக்கு. 
படத்தின் பாடல்கள் வெளியீட்டை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடத்துகிறார். ஜுன் 6 -ஆம் தேதி விழா நடக்கிறது. படத்தில் நடித்தவர்கள், பங்காற்றியவர்கள் மட்டுமின்றி நடனக் கலைஞர்கள், திரையுலக விஐபிகள் என்று கணிசமான நபர்களை மலேசியாவுக்கு சொந்தச் செலவில் அழைத்து செல்கிறார். விமானச் செலவை வைத்து ஒரு மலையாள படத்தை எடுத்துவிடலாம் என்கிறார்கள்.
 
தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் சிம்பு, அனிருத், லட்சுமி மேனன் என்று பார்ட் டைம் பாடகர்கள் பலர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil