Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் ஜே சூர்யா நடிப்பில் இதுவரை இல்லாத பிரம்மாண்டத்தில் வெப் சீரிஸ்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:35 IST)
இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா நடிக்கும் புதிய வெப் தொடர் உருவாக உள்ளது.

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து எஸ் ஜே சூர்யா மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து அவர் கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளாராம். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என சொல்லப்பட்ட நிலையில் இந்த வெப் சீரிஸை அமேசான் ப்ரைமுக்காக புஷ்கர் காயத்ரி தம்பதியினர் தயாரிக்க உள்ளார்களாம்.

இந்த வெப் தொடர் தமிழில் இதுவரை வெளியான வெப் தொடர்களிலேயே பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம். இதன் பட்ஜெட் சுமார் 30 கோடி ரூபாய் எனவும் விளம்பரப்படுத்தும் செலவு மட்டும் 10 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments