Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கும் விஜய்க்கும் உதவி செய்தாரா தனுஷ்? வதந்தி கிளப்புவதற்கு ஒரு அளவில்லையா?

Siva
வியாழன், 10 ஜூலை 2025 (18:37 IST)
ரஜினியின் 'கூலி' படத்திற்கும், விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கும் நடிகர் தனுஷ் உதவி செய்ததாக ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் போடப்பட்ட நிலையில், அதே செட்டை பயன்படுத்தி கொள்ள 'கூலி' படத்திற்கு அவர் அனுமதி கொடுத்ததாகவும், 'கூலி' படத்தின் ஒரு சில காட்சிகள் அந்த செட்டில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இதேபோல், தனுஷின் இன்னொரு படத்தின் செட்டை 'ஜனநாயகன்' படக்குழுவினரும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
 
ஆனால், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், தனுஷ் நடித்த படத்தின் செட்டுகளை 'கூலி' மற்றும் 'ஜனநாயகன்' ஆகிய இரண்டு படங்களின் குழுவினர்களும் பயன்படுத்தவில்லை என்றும், அவர்கள் தனியாக செட் போட்டுத்தான் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்றும் இரண்டு படங்களின் வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.
 
 எனவே, தனுஷ் பட செட்டைத்தான் 'கூலி', 'ஜனநாயகம்' படக்குழுவினர் பயன்படுத்தினர் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments