Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

vinoth
திங்கள், 16 ஜூன் 2025 (08:50 IST)
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தமாகியுள்ளார். கன்னடத்தில் வெளியான சப்த சாகரடச்சோ எல்லோ என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற ருக்மிணி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகிவருகிறார். விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தில் நடித்த அவர் தற்போது சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூன்று நாளில் இத்தனைக் கோடி வசூலா?... படை தலைவன் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஒரு பிச்சைக்காரன் திடீரென கோடீஸ்வரனாக மாறுவது எப்படி? ‘குபேரா’ டிரைலர்..!

காந்தாரா படக்குழுவைத் துரத்தும் சோகம்… ஷூட்டிங்கின் போது படகு கவிழ்ந்து விபத்து!

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments