Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்ரம்மாதேவியின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 25 ஜூலை 2015 (11:15 IST)
ராணி ருத்ரம்மாதேவியின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
 
ராணி ருத்ரம்மாதேவியின் வாழ்க்கை வரலாறை ருத்ரம்மாதேவி என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார், இயக்குனர் குணசேகர். இவர் ஒக்கடு (தமிழில் கில்லி) போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். ராணி ருத்ரம்மாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். ராணா, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
ருத்ரம்மாதேவிக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லருக்கு பின்னணி இசை சேர்க்கவே அவர் 3 தினங்கள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. முழுப்படத்துக்கும் 3 நாள்களுக்கு மேல் அவர் எடுத்துக் கொள்வதில்லை. 
 
இந்தப் படம் இந்த மாதம் வெளியாகியிருக்க வேண்டும். 3டி வேலைகள் இன்னும் முடியாததால் படவெளியீட்டை செப்டம்பர் 4 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அன்று நிச்சயம் படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
ருத்ரம்மாதேவியின் தமிழ் பதிப்பின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments