இந்தவாட்டி மதப்பிரச்சனையா? வெளியானது ருத்ர தாண்டவம் டிரெய்லர்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:44 IST)
இயக்குனர் மோகன் இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

திரௌபதி படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.

”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரௌபதி படத்தில் தலித் மக்களின் மீதான் வன்மம் வெளிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் கிறிஸ்துவ மதத்தை விமர்சனம் செய்யும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதை டிரெய்லர் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments