Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு கார் வழக்கு: விஜய் அபாரதத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (12:52 IST)
சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபாரதத்திற்கு இடைக்கால தடை!

தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.
 
மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்தது. இந்த அபராதத்தை முதல்வர் கோவிட் பொது நிவாரண நிதியில் இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தற்போது சில நிபந்தனை விதித்துள்ள விஜய் தரப்பு, என் காருக்கு வரி கட்ட தயார். ஆனால், தனி நீதிபதி கருத்துகளை நீக்க வேண்டும். அவர் விதித்த அபராத தொகை 1 லட்சத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நீதிபதி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அதன் மூலம் என்னை தேச விரோதி போல சித்தரித்து உள்ளார் என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீட்டுசெய்தது. நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments