Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.08கோடி ரொக்கம்,1.3 கிலோ தங்கம்,2.5 கிலோ வெள்ளி கடந்த 13நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை!

J.Durai
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (14:03 IST)
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்  உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
 
அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில்  தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள்,  வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர்  எண்ணினர். 
 
அப்போது கடந்த 13 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை   எண்ணியதில்  1 கோடியே, 08 லட்சத்து,25 ஆயிரத்து,477  ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 364 கிராம் தங்கமும், 2 கிலோ 560  கிராம்  வெள்ளியும், 303 அயல்நாட்டு நோட்டுகளும், 451 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத்  கோயிலின் இணை ஆணையர்  பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 7 நாட்களுக்கு கனமழை..!

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments