Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஆர் ஆர் வசூல் மழை… இரண்டே நாளில் எட்டிய மைல்கல் சாதனை – எத்தனை கோடி தெரியுமா?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (15:04 IST)
ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது.

இந்நிலையில் உலகளவில் இந்த படத்துக்கு செய்யப்பட்டுள்ள வியாபாரம் பற்றிய தகவல் சினிமா உலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் உருவான இந்த படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம். தெலுங்கில் எடுக்கப்பட்ட படத்தை பேன் இந்தியா படமாக்கி செம்மையாக தயாரிப்பாளருக்கு கல்லா கட்டி கொடுத்துள்ளார் ராஜமௌலி என்று கருத்துகள் சொல்லப்பட்டன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த படம் முதல் நாள் வசூலாக 223 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் படைக்காத சாதனையாகும். இதையடுத்து இப்போது இரண்டு நாள் வசூலாக உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments