Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 மில்லியன் பார்வை! தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை!!

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (17:05 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் 'மாரி 2' படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. 
 
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'ரவுடி பேபி' பாடலின் வீடியோவை யூ-டியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டார்கள். 
 
இப்பாடல் பெரும் வைரலாக பரவியது. மேலும், பில்போர்ட் இசைப் பட்டியலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது. 
 
முன்னதாக 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் தான் 91 மில்லியன் பார்வைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் அதிக பார்வை பெற்ற பாடலாக இருந்தது.  இச்சாதனையை 'ரவுடி பேபி' பாடல் நேற்று  முறியடித்தது. இதனால் தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பெருமிதம் அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments