Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோமியோ ஜுலியட்டுக்கு கிடைத்த வரிவிலக்கு ரெமோவுக்கு ஏன் கிடைக்காது...?

ரோமியோ ஜுலியட்டுக்கு கிடைத்த வரிவிலக்கு ரெமோவுக்கு ஏன் கிடைக்காது...?
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (15:26 IST)
ரெமோ என்ற பெயர் தமிழ் கிடையாது என்பதால், அரசின் 30 சதவீத வரிச்சலுகை படத்துக்கு கிடைக்காது, அதனால் படத்தின் பெயரை ரெங்கநாதன் என்கிற மோகனா என மாற்ற உள்ளதாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது.
 

 

 
ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் ரெமோ என்கிற பெயரை மாற்றப்போவதில்லை என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது. அப்படியானால் வரிச்சலுகை...?
 
இங்கேதான் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று விளையாடுகிறது ரெமோ டீம்.
 
ரெமோ என்ற பெயரை கிறிஸ்தவர்கள் அதிக அளவில் பிள்ளைகளுக்கு வைக்கின்றனர். இதுவொரு பெயர்ச்சொல். சிவாஜி, ரோமியோ ஜுலியட் படங்களெல்லாம், அந்தப் பெயர்கள் பெயர்ச்சொல் என்பதால் வரிவிலக்கு பெற்றன. அந்தவகையில் ரெமோவுக்கும் வரிவிலக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
 
இரண்டெழுத்து பெயருக்கு என்னவெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தான் என் தந்தையின் மரணத்திற்கு காரணம் – கதறிய மகள்