Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடியா கொல்லப்பட்ட ராத்திரிதான் ஆர்கேயின் வைகை எக்ஸ்பிரஸ்

நாடியா கொல்லப்பட்ட ராத்திரிதான் ஆர்கேயின் வைகை எக்ஸ்பிரஸ்
, திங்கள், 2 மார்ச் 2015 (13:15 IST)
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்திருக்கும் என் வழி தனி வழி இந்த மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு முன் ஆர்கே நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தை தொடங்கியுள்ளனர்.
 
ஆர்கேக்கு ஓரளவு பெயர் வாங்கித் தந்த எல்லாம் அவன் செயல் படத்தையும் ஷாஜி கைலாஷே இயக்கியிருந்தார். இந்த மூன்று படங்களிலும் ஒரு சுவாரஸியமான ஒற்றுமை உள்ளது.
 
எல்லாம் அவன் செயல் மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த சிந்தாமணி கொலகேஸ் படத்தின் தமிழ் ரீமேக். வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள, என் வழி தனி வழி நானா படேகர் நடித்த இந்திப் படம், அப் தக் சப்பானின் தமிழ் ரீமேக். சமீபத்தில் தொடங்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான நாடியா கொல்லப்பட்ட ராத்திரி படத்தின் ரீமேக்.
 
மலையாளத்தில் மது இயக்கிய இந்தப் படத்தில் காவ்யா மாதவன் அக்கா, தங்கை என இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் ஒருவர் நாயகி இன்னொருவர் வில்லி. இந்த ட்விஸ்ட்தான் படத்தின் பிரதாக சஸ்பென்ஸ்.
 
தமிழில் வைகை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தயாராகும் படத்தில் சுரேஷ் கோபி நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆர்கேயும், காவ்யா மாதவன் நடித்த இரு வேடங்களில் நீது சந்திராவும் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil