Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் நடிக்க வந்த ரேவதியின் முன்னாள் கணவர்

மீண்டும் நடிக்க வந்த ரேவதியின் முன்னாள் கணவர்
, வெள்ளி, 4 நவம்பர் 2016 (19:02 IST)
நடிகை ரேவதியின் முன்னாள் கணவரும், ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மேனன் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
 

 
பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் மேனனும், ரேவதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு ரேவதி நடிப்பில் புதிய முகம் என்ற படத்தை சுரேஷ் மேனன் தயாரித்து இயக்கி நடித்தார். பாசமலர்கள் என்ற படமும் அவரது இயக்கத்தில் வெளிவந்தது.
 
10 வருடங்களுக்கு முன் ரேவதியும், சுரேஷ் மேனனும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு சினிமாவிலிருந்து முற்றிலும் விலகியிருந்த சுரேஷ் மேனனை தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
 
சுரேஷ் மேனனின் வரவு நல்வரவாகுக.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு மூன்று ஜோடிகள்