Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா

J.Durai
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (09:10 IST)
ஏ கே ஆர் ஃபியூச்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஐயப்பன் இயக்கத்தில் (ஏப்ரல் -2024) 20 - ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவரவிற்கும் திரைப்படம் "ரூபன்" இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 
 இந் நிகழ்வில்  இயக்குனர் கணேஷ் பாபு பேசியது ...
 
அனைவருக்கும் வணக்கம் சாமி படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சி மீண்டும் இந்த மாதிரி ஒரு நல்ல படம் வருது அப்படிங்க போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 
இந்த படத்தை இயக்கிய ஐயப்பன் அவர்களுக்கும்  மற்றும் பட குழுவினர்  அனைவருக்கும் நன்றி.
 
மியூசிக் ரொம்ப நல்லா இருக்கு எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 
 இயக்குனர் மோகன் ஜி பேசியது ... 
 
ரூபன் திரைப்பட குழுவினரை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
 
கடவுள் சம்பந்த பட்ட படங்கள்   குழந்தைகளை கூட்டிட்டு போய் திரையில் பாருங்க  சப்போர்ட் பண்ணுங்க   இயக்குனர்கள் அந்த மாதிரி படங்கள் திரும்ப பண்ண ஆரம்பிக்கணும்
 
எல்லா வகையான சினிமாக்களும் இங்க வந்து தமிழ் சினிமாவுல வரணும் மக்களுக்கு தேவையான கலையை பண்றது தான் எங்களுக்கு தெரிஞ்ச கிராஃப்ட் என்னோட படம் அரியலூர்  பிரச்சினையை பேசும் விழுப்புரத்தில் கடலூரில் இருக்கிற பிரச்சினையை பேசும் அந்த மக்கள் எப்படி பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு பேசும் விழுப்புரத்தில் இருக்கிற பெண்கள் காலேஜுக்கு போயிட்டு வந்து என்ன பிரச்சினை என்று பேசும் சேலத்தில் இருக்கிற பெண்களுக்கு வந்து ஆன்லைன்ல எந்த மாதிரியான பிரச்சனைகள்  அவங்கள வந்து  வறுமையில் பயன்படுத்தி  உங்களை கொண்டு போறாங்கன்னு பேசுவோம் நாங்க
 
இந்த ரூபன் திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தேங்க்யூ.
 
 சிறு பட  முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புச்செல்வன் பேசியது... 
 
இந்த படம்  மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும்   உண்மை  இந்த படம் கில்லி படம் பாத்திருக்கீங்களா விஜய் படம் அந்த மாதிரி மியூசிக் பிரசாத் பண்ணி இருக்காரு.
 
ரொம்ப எமோஷனலா ரொம்ப நல்லா இருந்தது ட்ரெய்லர்
 
ஹீரோ வந்து ரொம்ப நல்லா பண்ணி இருந்தாரு சான்சே இல்ல 
 
டைரக்டர் வேற லெவல் கேமரா மேன் எல்லாருமே ரொம்ப சூப்பரா பண்ணிருக்காங்க இந்தப் படத்தின் டீம் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி.
 
 படத்தின் நாயகன் விஜய் பிரசாத் பேசியது ... 
 
மீடியா நண்பர்களுக்கு வணக்கம்!இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஆறுமுகம் அண்ணன் கார்த்தி அண்ணா ராஜா அண்ணா அவர்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்திற்கு ஐயப்பன் சார நான் பர்ஸ்ட் பர்ஸ்ட் கரூர்ல தான்  மீட் பண்ணி கதை சொல்லி முடிச்சிட்டாரு இவங்க பஸ்ட் பேனர் இந்த படத்துல பண்றது நாங்க ஐயப்பன் படம் தான் பண்ணுவோம். எங்களுக்கு அந்த பேட்டன்ல சொல்லுங்கன்னு சொல்லி முடிச்சிட்டாரு.
 
அதுக்கப்புறம் யாரை வைத்து ஹீரோ பண்றீங்கன்னு கேட்டாங்க அப்ப ஐயப்பன் சார்  தம்பி ஒருத்தன் இருக்கான் சொன்னாரு உடனே ஓகே அவனை வச்சு பண்ணுங்க சொல்லிட்டாரு
 
ஐயப்பன் சாருக்கு ரொம்ப தேங்க்ஸ் இந்த படம் நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணினோம் தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை என்ற ஒரு வில்லேஜ் தான் பண்ணுனோம்
 
சூட்டிங் போயிட்டு இருக்கும்போது ஒரு திடீர்னு யானை வந்துடுச்சு அப்பதான் ஊர் ஜனங்கள் எல்லாம் சொன்னாங்க அந்த  இடத்தை விட்டு கிளம்புங்கன்னு
 
அப்ப எதுர்ல ஒரு பைக்ல வந்து ஒரு இடத்துல நிக்க சொல்லிட்டு எல்லா வண்டியும் வந்த பிறகுதான் அனுப்புனாங்க நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணனும் இந்த படத்துல நானும் மரம் ஏறி இருக்கேன்.
 
கேமரா மேன் சார் ஐயப்பன் சார் என் கூடவே வந்து  எப்படி பண்ணனும்னு சொல்லி எல்லாமே பண்ணி காட்டினாங்க பண்ணாங்க 
 
இந்த மாதிரி பல வெற்றி படங்களை கொடுக்கணும் என்ன மாதிரி நியூ பேஸ் ஹீரோக்களை வளர்த்து விடனும்னு கேட்டுக்குறேன் மீடியா நண்பர்கள் இந்த படத்தை நல்ல விதமா எடுத்துட்டு போய்  சப்போர்ட் பண்ணி இந்த படத்தை வெற்றி படமா மாத்தணும் நான் எட்டு வருஷமா கஷ்டப்பட்டு இந்த படத்துல வாய்ப்பு கிடைத்து நடிச்சிருக்கேன்  ஆக்சன் பேக்லாம் பண்ணி இருக்கேன்.
 
நீங்க எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணனும் நன்றி வணக்கம்.
 
 படத்தின் நாயகி காயத்ரி பேசியது ... 
 
அனைவருக்கும் வணக்கம்..
ஆன்மீக சப்ஜெக்ட் அப்படின்னு ஐயப்பன் சார் சொன்னப்ப இந்த ஒரு காட்சி இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனா அந்த மாதிரி எதுவுமே இல்ல 
 
கொஞ்சம் ரொம்ப  ரொம்ப டேஞ்சரஸ் ஆன சீன்ஸ்  கிராமத்துக்குள்ளேயேதான் நாங்க ஷூட் பண்ணுவோம். சோ அந்த வகையில என்ன சேபா பாத்துக்கிட்டாங்க.
 
டிரஸ் சேஞ்ச் பண்றதுக்கு கூட போன  டோரிலே நிறுத்தி கேட்பாங்க நீங்க என்ன ஜாதி இல்லல்ல இங்க எல்லாம் டிரஸ் சேஞ்ச் பண்ண கூடாது நீங்க அங்க போங்க அப்படின்னு   மேக்கப் அண்ணா  தேங்க்யூ அவர் வந்து அந்த வீட்ல செய்யும் அதே ஜாதிங்கிறதினால அவர் பேசி சொன்னாரு என் தங்கச்சி தான் பா கொஞ்சம் ரெஸ்ட் ரூம் மட்டும் யூஸ் பண்ண விடுப்பா. 
 
கொஞ்சம் உட்காரட்டும் 15 நிமிஷம் அப்படின்னு சொல்லி அங்க தான் அப்படித்தான் டிரஸ் சேஞ்ச் எல்லாம் பண்ணும் சோ அந்த அளவுக்கு நாங்க போராடி இருக்கோம் ஒரு வீட்ல கூட ஒரு சப்போர்ட் பண்ண மாட்டாங்க அந்த அளவுக்கு நாங்க போராடனும். 
 
இதுல ஒரு செயின்ல வந்து நான் ஊர ஒருத்தவங்களோட கதைல போய் தட்டி தட்டி கேட்பேன் அய்யோ என்னோட புருஷன பாத்தீங்களா புருஷனை பார்த்தீர்களா அப்படின்னு அந்த சீன்ல அவங்க அலோ பண்ண மாட்டோம் என்ற அளவுக்கு வந்துட்டாங்க இல்ல அங்க போகக்கூடாது இங்க போகக்கூடாது இங்க தொடக்கூடாது என்ற மாதிரி மஞ்சள் எல்லாம் தெளிச்சு விட்டாங்க ரொம்ப கஷ்டமா இருந்தது அவளை கஷ்டப்பட்டு அந்த கிராமத்துல அந்த காட்டுல நாங்க நடிச்சிருக்கோம் ரொம்ப நன்றி சார்
நன்றி சார்.
 
 படத்தின் இயக்குனர் ஐயப்பன் பேசியது ... 
 
வாழ்த்த வந்திருந்த நிறைய இயக்குனர்கள் பெரியவங்க சார்லி சார் என பேசும்போது என்ன பேசுறதுன்னு தெரியாம போச்சு அவ்ளோ எனக்கு புடிச்ச ஒரு ரொம்ப ரொம்ப நான் நேசிச்ச என்ன நிறைய டி ஆர் சார் படங்கள் எல்லாம் நான் அவரை ரொம்ப ரசிக்க கூடிய ஒரு கேரக்டர் அதனால அந்த மாதிரி இடங்கள்ல நிறைய பேர் அந்த மாதிரி அதே மாதிரி டாடா டைரக்டர் மோகன்ஜிசார் எல்லாரையுமே நிறைய பேசணும்  ரொம்ப நன்றி
 
இந்த படம் கண்டிப்பா ஒரு கமர்சியல் கலந்து படமா இருக்கும் இது ஒரு சாமி படம் என்று எல்லாரும் பதிவு பண்றதால கண்டிப்பா இது அப்படி கிடையாது நீங்க சமீபத்துல காந்தாரா? அனுமான் போன்ற படங்கள் வரிசையில் கண்டிப்பா இந்த படம் இடம் பிடிக்கும் ரொம்ப நல்ல கமர்சியல் ஓட இந்த படத்தை ஒரு தெய்வீகமா நாங்க எடுத்திருக்கோம். இந்த தயாரிப்பாளர்கள் ரொம்ப ரொம்ப எங்களுக்கு சப்போர்ட் பண்ண விதம் பெரிய விஷயம்.ஒரு பெரிய சேலஞ்ச் என்னன்னா சினிமாவுல ஒரு சின்ன பட்ஜெட் குடுத்துட்டு அதுல ஒரு பெரிய விஷுவல் காட்டறது என்பது ஒரு சவாலான விஷயம் நான் அந்த பெரிய விஷுவல் பண்றதுக்கு நான் படிச்ச நாவல் எனக்கு என்ன சொல்றேன் கேமரா மட்டும் குடு எனக்கு அது போதும் அப்படி எல்லா இடத்திலும் சொல்லுவாங்க ஏன்னா அது ஒன்னு தான் நான் பேசுற ஆயுதமா எல்லா இடத்திலும் பார்க்கப்படுது அதனால் அந்த ஆயிதத்தை என்கிட்ட கொடுத்துட்டாங்க நான் ஓடிட்டே இருந்தேன் அதனால இந்த ப்ரொடியூசர்க்கு ரொம்ப நன்றி.
 
வந்திருந்த எல்லாருக்கும் நன்றி தேங்க்யூஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இந்த இனிய வாய்ப்பினை நழுவிய ஏ கே ஆர் பி எஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
 
 நடிகர் சார்லி பேசியது ... 
 
அருகில் வீற்றிருக்கும் அத்தனை பெரியவர்களுக்கும் அடியினுடைய பணிவான வணக்கங்கள்.
 
நான் மிகைப்படுத்தி சொல்லல ரொம்ப யதார்த்தமான ஒரு உண்மையை சொல்றேன் எனக்கு பர்சனலா எத்தனை முறை கடல் அலைகளை பக்கத்தில் இருந்து பார்த்தாலும் திகட்டவே திகட்டாது எப்பொழுதுமே எனக்கு அது மகிழ்ச்சி. பெரிய மலை அடிவாரத்தில் நின்னுகிட்டு வியாதித்து இருக்கும் உயர்ந்து நிற்கும் அந்த மலையை எப்பொழுது பார்த்தாலும் எனக்கு அனுப்பவே தோன்றாது அது ரொம்ப ரசிச்சு பார்த்துகிட்டே இருப்பேன் அது திரும்பத் திரும்ப எத்தனை முறை சந்தித்தாலும் உற்சாகத்தை கொடுக்கக் கூடியது இப்படி அடிக்கடி நினைத்த மாத்திரத்தில் பார்த்த மாத்திரத்தில் உற்சாகத்தை கொடுப்பது எனக்கு பர்சனலா நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் ஒன்றாய் கலந்து பணியாற்றும் என் ஊடக நண்பர்களுக்கு எத்தனை முறை பார்த்தாலும் நான் மிகவும் மகிழ்ச்சியின்றேன் உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.
 
இது சின்ன படம் அது பெரிய படம் அப்படிங்கற பாகுபாடு வந்து எடுக்கக்கூடிய படத்திலையோ போடக்கூடிய பட்ஜெட்லயோ கிடையாது படம் வெளியிட்டுருக்கு பிறகு மக்கள் எப்படி ரசிக்கிறாங்க இது எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது அதை பொறுத்து தான் அந்த படம் பெரிய படமாக கருதப்படுகிறது அந்த விதத்தில் ரூபன் படம் மிகப்பெரிய வெற்றி படம்
 
ரூபன் படம் எனக்கு நிறைய என்னுடைய பர்சனலா நிறைய விஷயங்களை அலசி ஒரு உட்படுத்திக் கொண்ட படம்.
 
இந்த ஐயப்பன் படைப்பாளி தலைசிறந்த இயக்குனர் மிகப் பிரமாதமான இயக்குனதாகில் சாதிக்கக்கூடிய மிகப்பெரிய சாதனைக்குரிய இயக்குனர் சில இயக்குனர்கள் என்னுடைய என்னை நேசிக்கும் நான் நேசிக்கும் எங்க டைரக்டர் பாசில் சார் ஒரு தடவை சொன்னாரு நீ நடந்து வந்து இதை இப்படி செய்யணும் அப்படின்னு நான் சீன் சொல்லிட்டேன் நீ எப்படி செய்றியோ அதுக்கு ஏத்த மாதிரி வைக்க போறேன் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஆனால் இந்த டைரக்டர் ஐயப்பன் சார் எப்படின்னா நிறைய எடுத்துட்டு வரமா அதை மட்டுமே எடுக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற ஆற்றல்மிக்க இயக்குனர் ஐயப்பன்.
 
அது மட்டுமல்லாமல் எங்க படக்குழுவினர் அத்தனை பேரையும் அந்த இறைவன் ஐயப்பனும் இறையருளும் என்றென்றும் காத்து இந்த ரூபன் திரைப்படம் வெற்றி வெற்றி என்று பறைசாற்றும் நிச்சயமாக உறுதி அனைவருக்கும் நன்றி வணக்கம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்... ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சம்பவம்!

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என்னாச்சு… செல்வராகவன் அளித்த பதில்!

தீபாவளி வின்னர் லக்கி பாஸ்கரின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… !

ராம்குமார் விஷ்ணு விஷால் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

கோவையில் தொடங்கும் ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments