Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: சாக்சி காப்பாற்றப்பட்டாரா?

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (08:30 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது சாக்சிதான் என அனைவரும் நேற்று வரை உறுதியாக நம்பிக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சாக்சி காப்பாற்றப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது 
 
கடந்த வாரம் முக்கோண காதல் விஷயத்தில் கடுப்பேற்றிய சாக்சி தேவையில்லாமல் கவினை காயப்படுத்தியதோடு லாஸ்லியா மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறினார். தனக்கும் லாஸ்லியாவுக்கும் வெறும் நட்பு மட்டுமே இருப்பதாக கவின் கூறியும், கவின் தன்னை கழட்டிவிட்டு, லாஸ்லியாவுடன் தன் கண்முன்னே கைகோர்த்து கொண்டதாக சாக்சி குற்றஞ்சாட்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்து மற்ற போட்டியாளர்களையும் வெறுப்பேற்றினார். 
இதனால் பார்வையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து சாக்சியை வெளியேற்ற முடிவு செய்தனர். நேற்றுவரை சாக்சிதான் குறைந்த வாக்கு பெற்றிருந்தால் அவர் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று திடீர் திருப்பமாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் நடுநிலையாக இருப்பதாக கூறிக்கொண்டு அனைவருக்கும் ஜால்ரா அடித்து கொண்டிருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு அவர் பெரிய தவறு ஏதும் செய்துவிடவில்லை. மற்றவர்களை ஒப்பிடும்போது ரேஷ்மா ஓரளவுக்கு பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஒன்றும் அறியாத அப்பாவியான ரேஷ்மாவை பிக்பாஸ் வெளியேற்றுவது திடீர் திருப்பமாக மட்டுமின்றி பார்வையாளர்கள் அதிருப்தி அடையும் வகையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று இரவு வரை பொறுத்திருந்து வெளியேறுவது யார் என்பதை பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments