Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விடுதலை'' பட டிரைலர் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (21:42 IST)
'விடுதலை' படத்தின்  டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர்  இயக்கத்தில் சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.

இந்த படத்தின் படப்பிடிப்பு   கடந்தாண்டு நிறைவடைந்தது. இதையடுத்து, விடுதலை படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளை இளையராஜா தொடங்கிய நிலையில், சமீபத்தில், இளையராஜா இசையமைப்பில், தனுஷ் பாடிய பாடல் வெளியாகி வைரலானது.

இப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி விடுதலை பட முதல் பாகமும், அடுத்து  மூன்று  மாதம் கழித்து ஜூலையில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையி தற்போது விடுதலை பட டிரெயிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், போலீஸாரால் வலைவீசித் தேடப்படும் மக்கள் படைத்தலைவனாக  விஜயசேதுபதியும், காவலராக சூரியும் நடித்துள்ளனர்.

இந்த டிரெயிலரில் ''மக்கள் பிறக்கும்போதே, அவர்களை ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் சைடுலன்னு பிரிக்கற நீங்க பிரிவினை வாதிகளா, இல்ல சமுதாயத்தில எல்லாரும் ஒண்ணுன்னு நினைச்சு போராடர நாங்க பிரிவினை வாதிகளா என்று விஜய் சேதுபதி பேசும் வசனம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும், இளையராஜாவின் இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments