Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு கொரோனா பரிசோதனை முடிவு வெளியீடு

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (15:38 IST)
அண்ணாத்த ஷூட்டிங்கில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பலருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வரிகிறது. இதில், ரஜினிக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. ரஜினிகாந்த் ஜனவரி முதல் அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்த படத்தை அதற்குள் முடிக்க அவசரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் பணிபுரியும் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.  படப்பிடிப்பைச் சேர்ந்த பலருக்கும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில்ரஜினிக்கு கொரோனா தொற்றில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை புறப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் ஐதராபாத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments