பிரபாஸின் கல்கி திரைப்பட ரிலீஸ் உரிமையைப் பெறும் முன்னணி நிறுவனம்… கமல்தான் காரணமா?

vinoth
வெள்ளி, 7 ஜூன் 2024 (15:39 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் பிஸ்னஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தைத் தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன்தான் படக்குழுவிடம் பரிந்துரை செய்து ரெட் ஜெயண்ட்ஸிடம் படத்தைக் கொடுக்க சொன்னதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments