Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோச்சடையான் தள்ளிப் போனதன் நிஜக்காரணம்

Webdunia
வியாழன், 15 மே 2014 (11:15 IST)
கோச்சடையானின் நவீன தொழில்நுட்பம் காரணமாகவே பட வெளியீடு தள்ளிப் போனது என்று விரிவாக தயாரிப்பு தரப்பு அறிக்கை வெளியிட்டது. இவ்வளவு வருடங்களான பிறகும் இந்த தொழில்நுட்பம் குறித்து தெரியாமலா ரிலீஸ் தேதியை அறிவிக்கிறார்கள் என்ற முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து படம் தள்ளிப் போனதுக்கு புதுக்காரணம் ஒன்றை தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
மே 9 படவெளியீடு என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு முன்பதிவும் தொடங்கியது. இரண்டு மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 12,500 டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. கோச்சடையான் பெட்டி எங்களுக்கும் வேண்டும் என்று மேலும் 200 திரையரங்கு உரிமையாளர்கள் ஒற்றைக்காலில் நிற்கிறார்களாம். அவர்களை ஏமாற்ற வேண்டாமே என்று நினைத்ததால்தான் இந்த தாமதம் என்கிறார்கள். இந்த 200 திரையரங்குகளுக்கும் 200 பிரதிகள் போட வேண்டியிருந்ததால் திட்டமிட்டபடி மே 9 படத்தை வெளியிட முடியவில்லையாம். 
 
அதாவது அதிக டிமாண்ட் காரணமாகவே படம் தள்ளிப் போனது என்கிறார்கள்.
 
இந்நிலையில் விநியோகஸ்தர்கள் கூடி புது முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது மே 23 படம் வெளியானால் ஓகே. அதுவும் தள்ளிப் போனால் ஜுன் 6 ஆம் தேதிவரை கத்திருப்பது. அன்றும் படம் வெளியாகவில்லையென்றால் கோச்சடையான் படத்தையே புறக்கணிப்பது. இதுதான் அவர்கள் எடுத்த ரகசிய முடிவு என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. 
 

சூரியின் கருடன் படத்தின் டிரைலர் & ஆடியோ லான்ச் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

5 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹரிஷ் கல்யாணின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

ரிலீஸுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ‘கொட்டுக்காளி’

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

Show comments