Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தை முன்னிட்டு '' 96 ''படம் ரீ ரிலீஸ்

Sinoj
சனி, 10 பிப்ரவரி 2024 (20:04 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 96 படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
 
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்  விஜய் சேதுபதி. இவர் நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் '96'.
 
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து திரிஷா நடித்திருந்தார். இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். கோவிந்த் இசையமைத்திருந்தார்.
 
இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காதலர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
 
இந்த நிலையில், 96 படத்தை வரும் காதலர் தினமான 14 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடித்து,  இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

’சூரரை போற்று’ இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்ப்பு.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

கேம் சேஞ்சர் படத்தில் இரட்டை வேடத்தில் ராம்சரண் தேஜா?

"மகாராஜா"திரை விமர்சனம்!

"லாரா"படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments