Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியின் ‘பூமி’ டிரெய்லர் ரிலீஸ்: வீடியோ இணைப்பு!!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (13:12 IST)
ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியாகியுள்ளது. 

 
ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகத்தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது. 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த பூமி திரைப்படம் திடீரென ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 
 
இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments