Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவில் முதல் நடிகை… இன்ஸ்டகிராமில் ராஷ்மிகா செய்யும் தரமான சம்பவம்!

Webdunia
திங்கள், 1 மே 2023 (15:37 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.

இப்போது ராஷ்மிகாவை 3 கோடியே 80 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். விரைவில் இந்த எண்ணிக்கை 4 கோடியை நெருங்கும் என சொல்லப்படுகிறது. இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய நடிகையாக ராஷ்மிகா உருவாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments