Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் வரும் ட்ரோல்கள் என்னைப் பாதிக்கின்றன… ராஷ்மிகா மந்தனா ஆதங்கம்!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (10:29 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா தன் மீது பரப்பப்படும் ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது தவிர அவர் நடிப்பில் புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் தொடங்கிய அவரின் நடிப்பு இப்போது பாலிவுட் வரை நீண்டுள்ளது.

மிகவும் ஜாலியான ஆளான ராஷ்மிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமாக ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். தன் மீது தொடர்ந்து பரப்பப் படும் வெறுப்பு பிரசாரங்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் உறவுச் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும், சினிமா வாழ்க்கையையும் பாதிப்பதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே தான் சொல்லாததை எல்லாம் சொல்லி, தன்னை பற்றி ட்ரோல்கள் பரப்பப் படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரவலாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments